செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவனை கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவனை கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி போலீசில் சரண் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள செம்புலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் அசுபதி செல்வம்(35). மரம் வெட்டும் தொழிலாளி. அவரது மனைவி இசக்கியம்மாள். அவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளன. அசுபதி செல்வத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வதுடன் இயற்கைக்கு மாறாக உறவுக்கு அழைத்து செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இசக்கியம்மாளுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக அசுபதி சந்தேகப்பட்டார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே இசக்கியம்மாள் தனது உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அசுபதி தஞ்சம் அளித்த உறவினரை கொலை செய்ய முயற்சி செய்தார். பனையேறும் தொழிலாளியான அந்த நபரை கொலை செய்வதற்காக அசுபதி அரிவாளுடன் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உறவினர் வீட்டில் இசக்கியம்மாளை நேற்று முன்தினம் இரவு குடும்பம் நடத்த அழைக்க சென்றார். அப்போது அவர் வர மறுக்கவே தகராறு ஏற்பட்டது. சந்தேகப்புத்தி மற்றும் செக்ஸ் டார்ச்சரால் வேதனை அடைந்திருந்த இசக்கியம்மாள் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் அசுபதியின் மண்டையை உடைத்தார். இதில் இரத்த வெள்ளத்தில் மிதத்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
உடனே இசக்கியம்மாள் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அசுபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து இசக்கியம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications