5ம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்-சாலை மறியல் செய்த பெற்றோர்
தென்காசி: தென்காசி அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்யக்கோரி மாணவிகளின் பெற்றோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று 13வது வார்டு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையிலும் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் படிக்கும் 5ம் வகுப்பு மாணவிகளுக்கு வகுப்பாசிரியர் ஆண்டியப்பன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். உடனே பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் இது குறித்து புகார் செய்துள்ளனர். ஆனால் தலைமை ஆசிரியர் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆண்டியப்பன் தொடர்ந்து மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இன்று பெற்றோர் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டு மாணவ, மாணவிகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஆண்டியப்பன் இன்று பள்ளிக்கு வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பள்ளி முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியரை கைது செய்யவும், பணி நீக்கம் செய்யவும் வேண்டுமென பெறறோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications