10 நாட்களில் 4 இளம்பெண்கள் மாயம்: போலீஸ் தீவிர விசாரணை
நெல்லை: சேர்ந்தமரம் அருகே 10 நாட்களில் 4 இளம்பெண்கள் திடீரென மாயமாகியுள்ளனர். அவர்கள் கடத்தப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள அருணாச்சலபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் முப்புடாதி கனி. 10ம் வகுப்பு படித்துள்ளார். அவர் நேற்று முன்தினம் அதே ஊரில் நடந்த பூப்புனித நீராட்டு விழாவுக்கு சென்றார். இரவு வெகு நேரமாகியும அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் உள்ளூர் மற்றும் வெளியூர் உறவினர்கள் வீடுகளுக்கு சென்றாரா என்பது குறித்து விசாரித்தனர். ஆனால் அவர் எங்கும் செல்லாததால் சேர்ந்தமரம் போலீசில் புகார் செய்தனர்.
இது குறித்து சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் இளம்பெண் முப்புடாதி கனியை யாரும் கடத்திச் சென்றார்களா அல்லது காதல் வயப்பட்டு யாருடனும் சென்றாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 10 நாட்களில் மட்டும் சேர்ந்தமரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கரடிகுளம், கேவிமுத்துசாமிபுரம், வடநத்தம்பட்டி, அருணாச்சலபுரம் ஆகிய பகுதிகளில் பிளஸ்டூ, பிளஸ்ஓன், எஸ்எஸ்எல்சி படித்த மாணவிகள் மாயமானது குறிப்பிடத்தக்கது. இதில் இதுவரை போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. தொடர்ந்து மாணவிகள் மாயமாவது அப்பகுதியைச் சேர்ந்த பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications