புதுக்கோட்டையிலாவது தேமுதிக திராணியை நிரூபிக்குமா?
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தல் இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலிலாவது தேமுதிக திராணியை நிரூபிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திராணி இருந்தால் போட்டியிட்டு வென்று பாருங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் கூறியபோது ஆரம்பித்தது இந்த திராணி விவகாரம். இதையடுத்து கேப்டன் விஜயகாந்துக்கு திராணியார் என்ற பட்டமே வந்துவிட்டது. அவரும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளரை நிருத்தி தீவிர பிரச்சாரம் செய்தும் அதிமுக அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து புதுக்கோட்டை இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலிலும் சங்கரன்கோவிலைப் போன்று அதிமுக வாக்களர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து வெற்றி பெறும் என்று கூறி திமுக உள்ளிட்ட சில கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் தேமுதிக இந்த தேர்தலிலாவது திராணியை நிரூபித்துவிட வேண்டும் என்று போட்டியிட்டுள்ளது.
சங்கரன்கோவில் பிரச்சாரத்தில் விஜயகாந்தை விவசாயி ஒருவர் வம்பிழுக்க அவர் கடுப்பானார். ஆனால் புதுக்கோட்டையில் ஒரு சிறுவன் அவரைப் பார்த்து சபாஷ் என்று சொல்லியிருக்கிறான். விலை உயர்வை மையமாக வைத்து பிரச்சாரம் செய்த விஜயகாந்த் வார்த்தைக்கு மக்கள் எவ்வளவு மதிப்பு கொடுத்துள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு புதுக்கோட்டையில் இடைத்தேர்தல் துவங்கி நடந்து வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications