நித்தியானந்தா சிக்கும்போது அதை 'ஷூட்' செய்வோம்-பெங்களூர் போலீஸ்

தனது இறை வாழ்க்கையில் 2வது முறையாக தலைமறைவாகியுள்ளார் நித்தியானந்தா. இதற்கு முன்பு நடிகையுடன் அந்தரங்க கோலத்தில் இருப்பது போன்ற வீடியோ வெளியானபோது அவர் தலைமறைவானார். ஒரு மாத தேடலுக்குப் பின்னர் அவர் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து கர்நாடக சிஐடி போலீஸாரிடம் சிக்கி கைதானார்.
சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நித்தியானந்தா. கடந்த 7ம் தேதி அவரது பிடதி ஆசிரமத்தில் வைத்து கன்னட டிவி செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டார். இது பெரும் ரகளையாகி விட்டது.
போலீஸார் நித்தியானந்தா உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.இதையடுத்து நித்தியானந்தா தப்பிதலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை.
அவரைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகத்திற்கும், ஆந்திராவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவரை எங்கிருந்தாலும் பிடித்துக் கொண்டுவருவோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெங்களூர் கூடுதல் துணை கமிஷனர் அர்ச்சனா கூறுகையில், நித்தியானந்தா நிச்சயம் கைது செய்யப்படுவார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்குச் செல்லவுள்ளனர்.
கடந்த 2010ம் ஆண்டு அவர் ஆபாச வீடியோவில் தோன்றியது தொடர்பான புகார்களின் பேரில்கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். ஜாமீ்னில் வெளியேவந்த ஒருவர் தலைமறைவாவது சட்டப்படி குற்றமாகும். எனவே அந்த ஒரு காரணத்திற்காகவே நித்தியானந்தாவை கைது செய்ய முடியும்.
இந்த முறை எங்கு வைத்து நித்தியானந்தாவைப் பிடிக்கிறோமோ அங்கு வீடியோவில் அது பதிவு செய்யப்படும் என்றார் அர்ச்சனா.
இன்றும் பிடதியில் போலீஸ் சோதனை
இதற்கிடையே, பிடதி ஆசிரமத்தில் இன்று 2வது நாளாக கர்நாடக போலீஸார் சோதனை நடத்தினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications