ஒட்டு மொத்த ரெட்டி சமூகமும் ஜெகனுக்கே ஓட்டு-15 சீட் கிடைக்கும்: கருத்துக்கணிப்பு

ஆந்திராவில் நேற்று 18 சட்டசபைத் தொகுதிகளுக்கும், நெல்லூர் லோக்சபா தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடந்தது. இதில் ஒரு சட்டசபைத் தொகுதி தெலுங்கானா பகுதியில் உள்ளது. மற்ற தொகுதிகள் ஆந்திராவின் பிற பகுதிகளில் உள்ளன.
ஆந்திராவில்நடந்த இடைத் தேர்தல்தான் அனைவரது எதிர்பார்ப்புகளையும் கவர்ந்துள்ளது. காரணம், ஜெகன் மோகன் ரெட்டியால் இங்கு காங்கிரஸ் பெரும் அடியை வாங்கப் போகிறது என்ற தகவலால்.
ஆந்திராவில் தேர்தலுக்குப் பின்னர் நடந்த எக்சிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் ஆந்திர அழிவுக்கு கட்டியம் கூறுவது போல அமைந்துள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே சேனல் நடத்திய எக்சிட் போலில், கடப்பா எம்.பி. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 13 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெறும்.நெல்லூர் எம்.பி. தொகுதியிலும் அக்கட்சிக்கே ஜெயம் கிடைக்கும்.
காங்கிரஸ், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெறும். தெலுங்கானாவில் உள்ள ஒரே தொகுதியை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியே கைப்பற்றும்.
இந்தஇடைத் தேர்தலில் ஜெகன் மோகன் சார்ந்த ரெட்டி சமுதாயத்தினரின் வாக்குகள் முழுமையாக அவரது கட்சிக்கே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி காங்கிரஸில் இணைந்தது பலன் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications