கலாமை நிறுத்தினால் முலாயம் நிச்சயம் ஆதரிப்பார்: மமதா
Subscribe to Oneindia Tamil

முலாயம்சிங் நேற்று எடுக்கப்பட்ட முடிவில் ஊசலாட்டமாக இருக்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் மமதா பானர்ஜி இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. அதேபோல் இன்று மாலை மமதா பானர்ஜியை முலாயம்சிங் யாதவ் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லியில் இன்று நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான முக்கியமான மற்றொரு கூட்டம் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்படுகிறது. இதில் சோனியா, ,மன்மோகன்சிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இதனிடையே நாளை நடைபெற உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டத்தில் மமதா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications