மமதா, முலாயமின் அதிரடிகளுக்குப் பின்னால் இருக்கும் தேர்தல் கால்குலேஷன்கள்

நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பர். இவர்களது வாக்குகள் மாநிலங்களின் மக்கள் தொகை உள்ளிட்டவைகளின் அடிப்படையின் மதிப்பிடப்படும். ஒவ்வொரு எம்.பிக்கும் 708 வாக்குகள் மதிப்பு உண்டு. மொத்தம் 776 எம்.பிக்களும் 4,120 எம்.எல்.ஏக்களும் வாக்களிக்கின்றனர்.
இந்த வகையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான மொத்த வாக்குகள்: 10,98, 882. இதில் 5,49,442 வாக்குகளைப் பெறுபவரே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளின் மதிப்பை பார்க்கலாம்...
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி- மொத்த வாக்குகள்: 4,60,191
காங்கிரஸ் கட்சி: 3.30.485
சமாஜ்வாதி கட்சி : 68,812
திரிணாமுல் காங்கிரஸ்: 48, 049
பகுஜன் சமாஜ் கட்சி: 43,349
தற்போதைய சூழல் படி காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்காமல் போனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மொத்தம் 4.12,142 வாக்குகள் மட்டுமே கிடைக்கும்
இதேபோல் திரிணாமுல் காங்கிரஸை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளரை சமாஜ்வாதி கட்சி ஆதரித்தால் அந்த அணிக்கு மொத்தம் 5,29,003 வாக்குகள் கிடைத்துவிடும்.
ஒருவேளை மமதா ஆதரவு இல்லாமல் முலாயம்சிங் மற்றும் மாயாவதியை நம்பி குடியரசுத் தேர்தல் வேட்பாளரை அறிவித்தால் வெற்றி பெறத் தேவையான வாக்குகளுக்காக ஐக்கிய முற்போக்குக் கூடடணி போராட வேண்டியதுதான் இருக்கும். அதாவது 5,24,303 வாக்குகள்தான் கிடைக்கும். தேவையான வாக்குகள் 5,49,442. அப்போது ராஷ்டிரிய ஜனதா தளம் கை கொடுக்க வேண்டிய நிலை உருவாகும்.
இதனால்தான் முலாயம்சிங் யாதவும் மமதா பானர்ஜியும் தங்களது குரலை உயர்த்தியிருக்கின்றனர்.
தேசிய ஜனநாயக் கூட்டணி: மொத்த வாக்குகள் 3.04, 785
பாரதிய ஜனதா கட்சி : 2,23, 885
ஆக பாரதிய ஜனதா அணியைப் பொறுத்தவரையில் சொந்த பலத்தில் தனியே வேட்பாளரை நிறுத்த முடியாது.
இதேபோல் இரண்டு அணிகளிலும் இல்லாத கட்சிகளின் மொத்த வாக்குகள்: 2,62, 408.
இந்த அணி அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் நிறுத்தியிருக்கும் சங்மாவை ஆதரிக்கப் போகிறதா? அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரை ஆதரிக்கப் போகிறதா? என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
இந்தக் கூட்டல் கழித்தல்கள்தான் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் காங்கிரஸை கதிகலக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications