மமதா பாஜனரி, முலாயம்சிங்கின் அதிரடி ஆட்டம்- விறுவிறு ஆலோசனையில் சோனியா

இன்று காலையில் சோனியா காந்தியை பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் ஏ.கே. அந்தோணி, ப.சிதம்பரம் ஆகியோரும் திமுகவின் டி.ஆர்.பாலுவும் சோனியா வீட்டுக்குச் சென்று ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
சோனியாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த டி.ஆர். பாலு, யாரை முன்னிறுத்தலாம் என்று எங்கள் கட்சித் தலைவர் தெரிவித்திருந்ததை சோனியாவிடம் கூறியிருக்கிறேன். அதைத்தவிர்த்து வேறு எதையும் இப்போது கூறுவதற்கில்லை. இன்றோ அல்லது நாளையோ குடியரசுத் தலைவர் வேட்பாளர் பெயரை சோனியா காந்தி அறிவிப்பார் என்றார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி மற்றும் முலாயம்சிங் யாதவ் ஆகியோர் அப்துல்கலாம், மன்மோகன்சிங் மற்றும் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரது பெயர்களை குடியரசுத் தலைவர் வேட்பாளர்களாக பரிந்துரைத்திருந்தனர். காங்கிரசின் பிரணாப் அல்லது ஹமீத் அன்சாரியை நிறுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.
இதனால் கூட்டணிக்குள் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டிய நிலைக்கு சோனியாகாந்தி தள்ளப்பட்டுவிட்டார்.












Click it and Unblock the Notifications