Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முல்லைப் பெரியாறு அணையில் துளைகள் அடைக்கும் பணி நிறுத்தம்: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையில் போடப்பட்டுள்ள துளைகளை அடைக்கவிடாமல் தடுக்கும் கேரள அரசை கண்டித்து கூடலூரில் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடந்தது.

முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை பரிசோதிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அணையில் போட்ட துளைகளை அடைக்கும் பணியை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்த பணிக்காக ரூ.85 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு தனியார் கட்டுமான நிறுவனத்தின் மூலம் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் கடந்த 17 நாட்களாக துளைகளை அடைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த பணிக்காக தமிழகத்தில் இருந்து சென்ற சிமெண்ட் லாரிகளை கேரள வனத்துறையினர் திருப்பியனுப்பிவிட்டனர். இருப்பினும் வேலைகளை நிறுத்தாமல் கையிருப்பு உள்ள சிமெண்ட்டை வைத்து பேபி அணையில் போடப்பட்ட துளைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் மெயின் அணையில் 3 துளைகள் அடைக்கப்பட்டுள்ளன.

துளைகளை அடைக்கும் பணிகள் நேற்று மாலை வரை நடந்தது. தற்போது 23 மூட்டை சிமெண்ட் மட்டுமே கையிருப்பு உள்ளதால் இன்று முதல் துளைகள் அடைக்கும் பணி நிறுத்தப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தாகக் கூறப்படுகிறது. கையிருப்பு உள்ள சிமெண்ட்டை வைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருக்கிறார்களாம்.

இது குறித்து தமிழக அதிகாரிகள் கூறுகையில்,

அணையில் போடப்பட்ட 8 துளைகளில் 6 துளைகள் அடைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 துளைகளை அடைக்க போதிய சிமெண்ட் இல்லை. அதனால் இன்று முதல் துளைகளை அடைக்கும் பணியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த 2 துளைகளை அடைக்க 360 சிமெண்ட் மூட்டைகள் தேவைப்படுகிறது. இது குறித்து தமிழக அரசிடம் தெரிவித்துள்ளோம் என்றனர்.

இந்நிலையில் அணையில் உள்ள துளைகளை அடைக்க இடையூறாக இருக்கும் கேரள அரசைக் கண்டித்து முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழு சார்பில் நேற்று மாலை கூடலூர் மந்தையம்மன் கோவில் தெருவில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணி நடத்தப்பட்டது. மேலும் பேரணி முடிவில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாசயிகள் கலந்து கொண்டு கேரள அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். துளைகளை அடைக்க விடாமல் கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வந்தால் உண்ணாவிரதம், போராட்டம் என அடுத்தடுத்து பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தால் கூடலூர் மற்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+