நாடுவிட்டு நாடு போகும் ராமஜெயம் கொலை வழக்கு: இலங்கையில் தனிப்படை டீம்!

Subscribe to Oneindia Tamil

Ramayajam
திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமெஜயம் கொலை வழக்கில் இலங்கை பிரமுகர் ஒருவருக்கும் தொடர்பிருப்பதாக தெரியவர தனிப்படை டீம் அந்த நாட்டுக்கு சென்றுள்ளது.

ராமஜெயம் கொலை செய்யப்பட்டு மாதங்கள் உருண்டோடி வரும் நிலையில் இன்னமும் கொலையாளி யார் என்பது தெரியவில்லை. ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த அனைத்து தனிப்படைகளும் கலைக்கப்பட்டு புதிய டீம்கள் போடப்பட்டுள்ளன.

இதில் ராமஜெயத்துக்கு நெருக்கமான வினோத் மற்றும் கண்ணன் ஆகியோரிடம் தொடர்ந்து ஒரு டீம் விசாரணை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் இன்னொரு டீம் இலங்கைக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

ராமஜெயத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய நபர் அவரிடம் இருந்து ரூ300 கோடி அளவுக்கு ஆட்டையைப் போட்டுவிட்டாராம். இதை தெரிந்த ராமஜெயம் பலரது முன்னிலையில் அந்த நபரை நையப் புடைத்திருக்கிறார். அடிபட்ட புலியாக இருந்த அந்த நபர், இலங்கையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் நெருக்கமானாவராம். அவரிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறார். அந்த பிரமுகரும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருக்கும் தமக்கு தெரிந்த ஆட்களை வைத்து ராமஜெயத்தின் கதையை முடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனிப்படை டீம் ஒன்று இலங்கை சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கையிலிருந்து தனிப்படை டீம் தமிழகம் திரும்பும்போது அதிர்ச்சியடைய வைக்கும் பல தகவல்கள் வெளியாகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+