ஆட்சியில் இல்லாவிட்டாலும் எழுச்சியோடுதான் இருக்கிறோம்-ஸ்டாலின்
சென்னை: திமுகவினர் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும சரி எப்போதும் எழுச்சியோடுதான் இருப்பார்கள் செயல்படுவார்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 89-வது பிறந்த நாளையொட்டி 2,089 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசுகையில், வெயிலிலும், மழையிலும் உழைக்கக் கூடியது குடை. அதைப்போலத்தான் கருணாநிதியும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சமுதாயப் பணியையே முதன்மையாகக் கருதுபவர்.
கடந்த திமுக ஆட்சியில் உலகத்தில் யாருமே செய்யமுடியாத அளவுக்கு பல்வேறு சாதனைகளை கருணாநிதி செய்துள்ளார். இந்தச் சாதனைகளை கருணாநிதியே மீண்டும் ஆட்சிக்கு வந்தால்கூட செய்ய முடியாது என்று சொல்லலாம். ஆனாலும் பொதுத் தேர்தலில் திமுக தோற்றது. இந்தத் தோல்வியால் திமுகவினர் துவண்டுவிடவில்லை, எப்போதும் போல எழுச்சியுடன் செயல்படுகிறார்கள் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications