அணு உலை என்ன? அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் தயாரிப்போம்ல..: ஈரான் அதிரடி
டெஹ்ரான்: ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக குற்றம்சாட்டி அந்நாட்டின் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடையை விதித்திருக்கும் நிலையில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலையும் அந்நாடு தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் அணு ஆயுதத்தால் அலறிப் போய் இருக்கும் இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கும் என்ற நிலை இருந்தது. இஸ்ரேலின் கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காதான் தடுத்து பொருளாதாரத் தடை விதித்தது. பின்னர் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது ஈரான் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஈரானிடம் தற்போது 23 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இவற்றுடன் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை சேர்ப்பதற்காக அணுசக்தி என்ஜினை உருவாக்க உள்ளனர்.
இதுதொடர்பாக கடற்படை தளபதி அப்பாஸ் சாமினி கூறும்போது, ஈரான் அணுசக்தியை ஆக்கபூர்வ பணிக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். மின் உற்பத்தி, விவசாயம், மருந்து தயாரிப்பு போன்றவற்றுக்கு மட்டும் அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் என்ஜினை தயாரிக்க உள்ளோம். இது அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். 18 ஆயிரம் 750 டன் எடை கொண்ட கப்பலை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும். என்றார்.
ஈரானின் இந்த முயற்சியால் அமெரிக்கா கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறது இஸ்ரேலோ சீற்றத்தின் உச்சத்தில் இருக்கிறது.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் 3200 எண்ணெய் கப்பல்கள்.. 20 ஆயிரம் பணியாளர்கள் குடிநீர் இல்லாமல் அவதி -
கதவை தட்டும் ரெசிஷன்.. கச்சா எண்ணெய் 150 டாலர் தொடும்.. பயமுறுத்தும் கணிப்புகள் -
அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த 'குட் ப்ரைடே' ஷாக்: மஜீத் டெக்னாலஜியால், வானில் சுருண்ட வார்ஹாக் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு!












Click it and Unblock the Notifications