தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அத்வானி போட்டி?: அதிரடியாக யோசிக்கும் பாஜக!

டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் தீவிரமாக இதுபற்றி விவாதிக்கப்பட்டது.
அத்வானியைப் பொறுத்தவரையில் பாஜக சார்பிலோ தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பிலோ ஒரு வேட்பாளரை நிறுத்தாமல் கலாம் போட்டியிடுவதாக இருந்தால் கலாமையோ அல்லது ஜெயலலிதா, பிஜூ ஜனதா தளம் முன்னிறுத்தும் சங்மாவையோ ஆதரிக்கலாம் என்று கருதுகிறார். இதைத் தான் இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்திலும் அத்வானி வலியுறுத்தியிருக்கிறார். அத்வானியைப் போல சுஷ்மா ஸ்வராஜூம் இதே போன்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
பிரணாப் முகர்ஜியை நேரடியாக எதிர்க்க வலுவான ஒரு வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணியே நிறுத்த வேண்டும் என்றும் சங்மா அல்லது கலாம் சரியான போட்டியாக இருக்கமாட்டார்கள் என்றும் ஒருதரப்பினர் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால் பிரணாப் முகர்ஜியை ஆதரித்துவிடலாம் என்பதுதான் ஐக்கிய ஜனதா தளத்தின் கருத்தாக இருந்து வருகிறது. அவரை எதிர்க்க என்ன அவசியம் என்பதுதான் ஐக்கிய ஜனதா தளத்தின் கேள்வி.
இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இன்னொரு விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. பிரணாப் முகர்ஜியை எதிர்த்து பேசாமல் அத்வானியை நிறுத்திவிட்டால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள் அனைத்துமே ஆதரிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்பட்டது. இந்த யோசனை அத்வானியையே ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்ததாகவும் கூறப்படுகிறது.
அத்வானியை நிறுத்துவதன் மூலம் இன்னொரு விஷயத்தையும் அறிந்து கொள்ள பாஜக விரும்புகிறது. அதாவது 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கரம் கோர்க்கக் கூடிய கட்சிகளை அடையாளம் காணவும் வாய்ப்பிருப்பதாகவும் இப்பொழுது இருந்தே தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க வசதியாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் ஒருவேளை அத்வானி குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நிச்சயம் பிரணாப் முகர்ஜிக்கு அது சவாலாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்றே கூறப்படுகிறது.
ஏற்கனவே பிரதமர் பதவிக்காக 'கொட்டாவி' விட்டு ஏமாந்து போனவர் அத்வானி. அந்த இடத்திற்கு இப்போது மோடி வந்து உட்கார்ந்திருக்கிறார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் என்ற 'புதிய கொட்டாவி'யை அத்வானி கையில் பாஜக கொடுக்கப் போவதாக கூறப்படுவது உண்மையிலேயே பரபரப்பான விஷயம்தான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications