'சென்டிமென்ட்'படி முதலில் சென்னைக்கு வருகிறார் பிரணாப் முகர்ஜி!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவரும், நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இவருக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இவருக்கு மாற்றாக யார் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்புக்கு இன்னும் முடிவு தெரிந்தபாடில்லை. அதேசமயம், பிரணாப் முகர்ஜி தனக்கு ஆதரவு தேடி பயணம் கிளம்பத் தயாராகி விட்டார்.
பல்வேறு கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு கோர அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக வரும் 30ம் தேதியன்று அவர் சென்னை வருகிறார். அங்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு கோருகிறார்.
டெல்லியைத் தாண்டி முதல் ஊராக அவர் சென்னைக்குத்தான் வருகிறார். இதில் காங்கிரஸ் கட்சியின் சென்டிமென்ட் அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் முதல் ஊராக சென்னைக்குத்தான் வந்தார். கருணாநிதியை சந்தித்து ஆதரவு கேட்டார். அதேபோல தற்போது பிரணாப் முகர்ஜியும் முதல் ஊராக சென்னைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை வரும் பிரணாப் முகர்ஜி, முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பாரா என்பது தெரியவில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications