புதுக்கோட்டை இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்கிய தேமுதிக- வாங்கிக் கட்டிய அமைச்சர்கள்!

போயஸ் தோட்டத்தில் புதுக்கோட்டை இடைத் தேர்தல் தொடர்பாக நேற்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 வரை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தின் மைய அஜெண்டாவே தேமுதிகவுக்கு எப்படி டெபாசிட் கிடைத்தது என்பதுதான்.
இதற்குப் பதிலளித்த அதிமுக அமைச்ச்சர்கள் பலரும், தேமுதிக வேட்பாளர் முஸ்லிம் என்பதால் முஸ்லிம் வாக்குகள் அப்படியே அவருக்குப் போனது காரணம் அம்மா என்று தலைகுனிந்தபடி கூறியிருக்கின்றனர். இதேபோல் திமுக, காங்கிரஸ் வாக்குகளும் அவருக்குப் போய்விட்டதாக கூறியிருக்கின்றனர். இதை ஏற்காத ஜெயலலிதா, ஒழுங்காக தொகுதியில் வேலை பார்க்காமல் இங்க வந்து சாக்கு போக்கு சொல்வதாக என வார்த்தைகளால் சாட்டையடி கொடுத்திருக்கிறார். மூத்த அமைச்சர்கள் சிலரது பெயரைக் குறிப்பிட்டே வெளுத்து வாங்கியதால் ஜூனியர் அமைச்சர்கள் பலரும் வெலவெலத்துக் கிடக்கின்றனர்.
இதனால் தொகுதிப் பக்கம் போகாமல் எப்ப கூப்பிடுவாங்களோன்னு அலறி சென்னையிலேயே முகாமடித்துக் கொண்டிருக்கின்றனர் அமைச்சர்கள்.
பொதுவாக புதுக்கோட்டை நகரத்தில்தான் கூடுதலாக தேமுதிகவுக்கு வாக்குகள் அதிகம் கிடைத்திருக்கிறது. இதனால் மாவட்ட அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட செயல விஜயபாஸ்கருக்கு கல்தா கண்டிப்பாக உண்டு என்பதும் போயஸ் வட்டார தகவல்கள். ஆனால் அமைச்சர் சுப்பிரமணியமும் விஜயபாஸ்கரும் நகரப் பகுதிக்குப் பொறுப்பான அமைச்சர்களை நிச்சயம் அடுத்த "ரவுண்டில்" காட்டிக் கொடுத்து எஸ்கேப்பாகிவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications