வாய் பேச முடியாத பெண் எரித்துக் கொலை: அக்கா மகனிடம் தீவிர விசாரணை
குமரி: குமரி மாவட்டத்தில் வாய் பேச முடியாத பெண் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தாணுமலையான் புதூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி லட்சுமி. வாய் பேச முடியாதவர். அவர்களுக்கு கவிதா என்ற மகள் உள்ளார். கோவிந்தன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் கவிதாவுக்கும், லட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் தனித்தனியே வசித்து வருகின்றனர்.
லட்சுமி முதியோர் உதவித் தொகை பெற்று வருகிறார். அவருக்கு வீடு இல்லாததால் அவரது அக்கா அனுசுயா என்பவர் வீட்டு திண்ணையில் படுத்து உறங்குவது வழக்கம். அப்போது பசிக்கு அக்காவிடம் உணவு, கஞ்சி தரும்படி கேட்பாராம். இதனால் அவரை தொல்லையாக நினைத்த அனுசுயா தனது வீட்டு திண்ணையில் படுக்கக் கூடாது என தகராறு செய்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் முன்பு இதுபோல் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து லட்சுமி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அனுசுயாவுக்கு அறிவுரை கூறி சமாதானம் செய்து வைத்தனர்.
ஆனாலும் அவர்களுக்குள் தகராறு இருந்துள்ளது. லட்சுமி தொடர்ந்து அனுசுயா வீட்டு திண்ணையில் படுத்து உறங்கி வந்துள்ளார். நேற்றும் அவர் திண்ணையில் படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அனுசுயா வீட்டு பக்கத்தில் உள்ள குடிநீர் தொட்டி அருகே எரிந்த நிலையில் லட்சுமி பிணமாகக் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் லட்சுமி மீது பெட்ரோல், ஆயில் ஊற்றி கொளுத்தியது தெரிய வந்தது. மோப்பநாய் ஓரா வரவழைக்கப்பட்டது. அது உடல் கிடந்த இடத்தில் இருந்து அனுசுயா வீட்டிற்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அனுசுயாவின் மகன் கல்யாண சுந்தர் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications