+2 சிறப்பு துணை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வினியோகம் துவக்கம்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் கூறப்படுவதாவது,
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான சிறப்பு துணை தேர்வு ஜூன் 22 ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட் ஜூன் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
பள்ளி மாணவராக தேர்வு எழுதி தோல்வியடைந்து சிறப்பு துணை தேர்வுக்கு பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்தவர்கள் அவர்கள் படித்த
பள்ளிகளிலேயே ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.
தனித்தேர்வராக தேர்வு எழுதி தோல்வியடைந்து தற்போது சிறப்பு துணைதேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட் வினியோக மையத்தில்
ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications