தேர்தலில் தோற்றதா சரித்திரமே இல்லை.. ஜெயிக்கப் போறது நான்தான்....: அசராத சங்மா

இது தொடர்பாக சங்மா கூறியுள்ளதாவது:
என்னைப் பொறுத்தவரையில் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிதான் பெற்றிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் நான் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்திலேயே ஒவ்வொருமுறையும் வென்றிருக்கிறேன். தற்போது நடப்பது ரகசிய வாக்கெடுப்பு முறை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மட்டுமல்ல.. அனைத்து கூட்டணியிலுமே குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பிளவு இருக்கத்தான் செய்கிறது. மமதா பானர்ஜியைப் பொறுத்தவரையில் என்னைத்தான் ஆதரிப்பார் என்பதில் உறுதியாக இருக்கிறேன். எனது வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றார் அவர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிதான் வெற்றி பெறுவது உறுதி என்றாகிவிட்ட நிலையிலும் கூட சங்மாவின் வெற்றி சங்கநாதம் பலரையும் திரும்பித்தான் பார்க்க வைக்கிறது.












Click it and Unblock the Notifications