உள்துறை அமைச்சக அலுவலகத்தில் திடீர் தீ ..அணைக்கப்பட்டது!

சமீபத்தில்தான் மும்பையில் மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலகத்தில் மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டது. இதில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோரின் அறைகள் முழுமையாக எரிந்து போயின. 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் டெல்லி, நார்த் பிளாக்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் பிற்பகலில் தீவிபத்து ஏற்பட்டது. தீப் பிடித்து அறைக்குள் கடுமையாக எரிந்து கொண்டிருந்தது. வெளியிலும் புகை வர ஆரம்பித்தது.
நார்த் பிளாக்கில் உள்ள மத்திய தலைமைச் செயலக வளாகத்தில், உள்துறை அமைச்சகத்தின் மாநாட்டு அறையில் தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறை 2வது மாடியில் உள்ளது.
நீண்ட தாமதத்திற்குப் பின்னர் வந்த தீயணைப்புப் படையினர் தீயை உடனடியாக அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ அணைக்கப்பட்டு விட்டதை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி உறுதிப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications