பரிதாபமாக முடிந்து போன மஹியின் 86 மணி நேர உயிர்ப் போராட்டம்

ஹரியானா மாநிலம் குர்கான் அருகே உள்ள மானேசர் பகுதியில் இருக்கும் கோ என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மஹி கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடியபோது எதிராபாராவிதமாக 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டாள். குறுகிய அந்த குழிக்குள் விழுந்த சிறுமி சுமார் 15 நிமிடமாக அலறியுள்ளாள்.
அதன் பிறகே அவளின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்தனர். ஆனால் மீட்பு படையினர் இரவு 12.30 மணிக்கு தான் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். சிறுமி கிட்டத்தட்ட 2 மணிநேரமாக தன்னைக் காப்பாற்றுமாறு அழுதாள். அதன் பிறகு அழைத்தாலும் பதில் சொல்ல மறுக்கிறாள் என்று சிறுமியின் தந்தை தெரிவித்தார்.
மீட்பு படையினர் ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக மற்றொரு பெரிய சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்க இரவு பகலாக போராடினர். சிறுமி சுவாசிக்க குழிக்குள் ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வந்தது. மேலும் சிறுமியைக் கண்காணிக்க குழிக்குள் கேமரா அனுப்பப்பட்டது. ஆனால் அதில் சிறுமியின் செயல்கள் தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையே சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு தோன்றிய அப்பகுதியைச் சேர்ந்த ரோடாஷ் தாயல் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு தோன்றியது தொடர்பாக விசாரணை நடத்துமாறு குர்கான் மாவட்ட நீதிபதி பி.சி. மீனா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அன்று சோர்ந்து காணப்பட சிறுமி, வெள்ளிக்கிழமை மேலும் பலகீனமானாள். இதனால் சிறுமி உயிருடன் மீட்கப்படுவாளா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும் மீட்பு படையினர் மண் சரிவு ஏதும் ஏற்படாமல் இருக்க மிகவும் எச்சரிக்கையுடன் சிறுமி அருகே செல்ல முயன்றனர்.
நேற்று முழுவதும் சிறுமிக்கு அருகே செல்ல முயற்சித்தனர். அவர்கள் முயற்சிக்கு இன்று தான் பலன் கிடைத்தது. ஆனால் அந்த சந்தோஷம் நீண்டநேரம் நீடிக்காமல் முடிந்து போனது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications