அறந்தாங்கி ஆசிரியை ஏன் கொல்லப்பட்டார் தெரியுமா?... அதிர வைக்கும் காரணம்!!!

Subscribe to Oneindia Tamil

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஆசிரியை ஒருவர் அவரது வீட்டில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கள்ளக்காதலே காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக மினி பஸ் டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த ஆசிரியைக்கும், கைதான நபருக்கும் இடையே பல வருட வயது வித்தியாசம் இருந்துள்ளது. மேலும் தனது ஆசை வலையில் அந்த வாலிபரை நிரந்தரமாக வைத்திருக்க ஆசிரியை முயன்றதும், ஆனால் அதிலிருந்து மீள அந்த வாலிபர் நினைத்ததும், அதை தடுக்க ஆசிரியை விபரீத மிரட்டல் விடுத்ததும், இதனால் ஆத்திரமடைந்து அந்த வாலிபர் ஆசிரியையைக் கொன்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த பரபரப்புச் சம்பவத்தின் பின்னணி ....

அறந்தாங்கியைச் சேர்ந்தவர் வானதி. இவருக்கு 46 வயதாகிறது. இவரது கணவர் முத்துக்காமாட்சி போலீஸ்காரராக இருந்தவர். பல வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். வானதிக்கு ஒரு மகன், மகள். மகள் கல்யாணமாகி கணவருடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். மகன் எம்.பி.ஏ படித்துள்ளார்.

வம்பரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்து வந்தார் வானதி. தினசரி மினி பஸ்ஸில் பள்ளிக்குப் போய் வருவார். அப்போது அவருக்கும் மினி பஸ் டிரைவர் சரவணன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு விட்டது. சரவணனுக்கு வயது 25தான் ஆகிறது. ஆரம்பத்தில் சிரித்துப் பேசி பழகி வந்த இவர்கல் பின்னர் நெருக்கமான உறவுக்குள் புகுந்து விட்டனர்.

அடிக்கடி தனது வீட்டுக்கு சரவணனைக் கூட்டிக் கொண்டு போய் மது உள்ளிட்டவற்றைக் கொடுத்து சிறப்பாக கவனிப்பாராம் வானதி. இதனால் வானதியின் மடியிலேயே கிடந்துள்ளார் சரவணன்.

இந்த நிலையில் சரவணனுக்கு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதை வானதியிடம் அவர் கூற, கொதித்துப் போனாராம் வானதி. என்னைத் தவிர வேறு யாரையும் நினைக்கக் கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் சரவணனோ, கல்யாணம் செய்து கொள்கிறேன், ஆனால் வழக்கம் போல இங்கும் வந்து செல்கிறேன் என்று கூறியுள்ளார். இதை வானதி ஏற்கவில்லை.

சரவணன் வழி மாறினாலும் மாறி விடுவார் என்று பயந்த வானதி, நாம் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ என்னிடம் இருக்கிறது. அதை மற்றவர்களுக்குக் காட்டி விடுவேன் என்று கூறி சரவணனை மிரட்டியுள்ளார். இந்த புதிய மிரட்டல் சரவணை கோபப்பட வைத்துள்ளது.

இந்த நிலையில்தான் சம்பவத்தன்று இரவு சரவணன், வானதி வீட்டுக்கு வந்துள்ளார். வழக்கம் போல மது அருந்தியுள்ளனர் இருவரும், சாப்பிட்டுள்ளனர். அப்போதும் வானதி, வீடியோ குறித்து பேசி மிரட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த சரவணன் வானதியை கொலை செய்து விட்டு தப்பிப் போய் விட்டார்.

கைது செய்யப்பட்ட சரவணன் மூலம் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசிரியை பரிதாபமாக வெட்டிக்கொல்லப்பட்டு விட்ட செய்தியால் அப்பகுதி மக்கள் சோகத்தில் இருந்தனர். ஆனால் கள்ளக்காதலால் ஆசிரியை கொல்லப்பட்டதாக தற்போது தெரிய வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+