ரூ.93க்கு பதில் ரூ.25,800 கட்டணம்: அதிர வைத்த மின்வாரியம்
நெல்லை: நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்த ஹோட்டல் தொழிலாளிக்கு ரூ.93க்கு பதிலாக ரூ.25,800 மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்தவர் பிரம்மநாயகம். ஹோட்டல் தொழிலாளி. அவருக்கு கடந்த மாத மின் கட்டணம் ரூ.25,800 என மின்வாரியம் அட்டையில் எழுதிக் கொடுத்தது. இதைப் பார்த்து அதிரிச்சி அடைந்த அவர் மின்வாரிய அலுவலக வசூல் மையத்திற்கு சென்று விளக்கம் கேட்டார்.
கொக்கிரகுளத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் கட்டணம் செலுத்தினால் கூட இவ்வளவுதான் வரும் என முறையிட்டுள்ளார். ஆனால் வசூல் மையத்தில் இருந்தவர்கள் இதை மறுத்து உங்களால் இப்போது முடியாவிட்டால் மாதா மாதம் தவணை முறையில் கட்டுங்கள் என்று தெரிவித்துவிட்டனர். வீட்டையே வேண்டுமானாலும் காலி செய்து விடுகிறேன். நீங்கள் பீசை பிடுங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிப் பார்த்தார். ஆனாலும் மின்வாரியத்தினர் அசைந்து கொடுக்கவில்லை. அவர் மின் வாரிய அதிகாரிகளை சந்தித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை விட வேறு வழியில்லை என முறையிட்டார்.
இதையடுத்து மின்வாரியம் அவருடைய வீட்டில் மறுபடியும் ரீடிங் எடுத்து பார்த்ததில் மின் மீ்ட்டர் பழுதானது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.93 என அறிவித்து அத்தொகையை மின்வாரிய ஊழியர்கள் பெற்றுக் கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications