வைகை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் ஜூலை 1 முதல் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரத்தை ஜூலை 1- ந் தேதி முதல் மாற்றியமைத்து புதிய ரயில்வே அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

புதிய அட்டவணைப்படி ஜூலை 1-ந் தேதி முதல் சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து ரயில்கள் புறப்படும் நேரம்:

எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில்கள்

சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான வைகை எக்ஸ்பிரஸ் பகல் 12.45க்கு பதில் பிற்பகல் 1.20க்கு புறப்படும். சென்னை எழும்பூர்- தூத்துக்குடி இடையேயான முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 7.35க்கு பதில் இரவு 7.15க்கு புறப்படும். சென்னை எழும்பூர்- மதுரை இடையேயான பல்லவன் எக்ஸ்பிரஸ் இரவு 9.15 மணிக்கு பதில் 9.20 க்கு புறப்படும். சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரவு 7.15க்கு பதில் இரவு 7.35க்கு புறப்படும். சென்னை எழும்பூர்- திருச்சி இடையேயான ரயில் காலை 8.20க்கு பதில் காலை 8.15 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள்

சென்னை சென்ட்ரல் - ஜெய்ப்பூர், சென்னை - சாப்ரா ரயில்கள் மாலை 5.35க்கு பதில் 5.40க்கு புறப்படும். சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் இரவு 9.15.க்குப் பதில் 8.45க்குப் புறப்படும். சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் இரவு 9.15க்கு சென்ட்ரலில் இருந்து கிளம்பும். சென்னை- கோவை இடையேயான தூரந்தோ ரயில் காலை 6.50 மணிக்குப் பதில் 7.15க்கு புறப்படும்.

சென்னை- பெங்களூர் இடையேயான பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 7.15 மணிக்கு பதிலாக காலை 7.50க்கு புறப்படும். கோவையில் இருநது சென்னை வந்து ஜெய்ப்பூர் செல்லும் ரயிலும் மாலை 5.40க்கு புறப்படும்.

புதிய ரயில்கள்

இவை தவிர 12 புதிய ரயில்களையும் தெற்கு ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.

சென்னை- பெங்களூர் இடையே இரண்டடுக்கு தினசரி ரயில், பிக்கானீர்- கோயம்புத்தூர் ( ஜோத்பூர், அகமதாபாத், கொங்கன் ரயில்வே, மங்களூர் வழி) இடையே வாராந்திர ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரயில், யஷ்வந்த்பூர்- கொச்சுவேலி (பங்கார்பேட், ஈரோடு, எர்ணாகுளம், கோட்டயம் வழி) இடையே வாராந்திர ஏசி எக்ஸ்பிரஸ் ரயில், ஷாலிமர்- சென்னை சென்ட்ரல்(விசாகப்பட்டினம் வழி) இடையே வாராந்திர ரயில், விசாகப்பட்டினம்- சென்னை சென்ட்ரல் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ், அசன்சோல்- சென்னை (ரூர்கேலா, சம்பல்பூர், விசாகப்பட்டினம்) இடையெ வாராந்திர ரயில், சென்னை சென்ட்ரல்- பூரி (விசாகப்பட்டினம் வழி) இடையே வாராந்திர ரயில், திருச்சிராப்பள்ளி- திருநெல்வேலி (திண்டுக்கல், மதுரை) இடையே தினசரி ரயில், திருநெல்வேலி- மும்பை (மங்களூர் வழி) இடையே வாராந்திர ரயில், காச்சிகுடா - மதுரை (காச்சிகுடா, காட்பாடி, ஜோலார்பேட்டை, ஈரோடு, திருச்சி வழி) இடையே வாராந்திர ரயில், திருப்பதி- மன்னார்குடி (காட்பாடி, மயிலாடுதுறை வழி) இடையே வாரம் 3 நாள் ரயில் சேவை,

மேலும் விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே தினசரி பயணிகள் ரயில், விழுப்புரம் -காட்பாடி இடையே தினசரி பயணிகள் ரயில், பாலக்காடு - ஈரோடு ( கோவை வழியே) தினசரி ரயில், மன்னார்குடி- மானாமதுரை( திருச்சி,காரைக்குடி வழியே) தின்சரி ரயில் ஆகியவையும் இயக்கப்பட உள்ளது.

நீட்டிக்கப்பட்ட ரயில் சேவைகள்

பெங்களூர்- சேலம் இடையேயான ரயில் சேவை நாகூர் வரை நீட்டிப்பு, டேராடூன்/சண்டிகர்- சென்னை சென்ட்ரல் இடையேயான ரயில்சேவை ஈரோடு வழியாக மதுரை வரை நீட்டிப்பு, தாதர்/யஷ்வந்த்பூர் - புதுச்சேரி இடையேயான வாரம் 6 நாள் ரயில் சேவையானது 3 நாட்கள் புதுச்சேரி வரையில் 3 நாட்கள் திருநெல்வேலி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி- மதுரை இடையேயான வாரம் இருமுறை ரயில் சேவையானது ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மங்களூர்- பாலக்காடு இடையேயான தினசரி ரயிலானது கோயம்புத்தூர் வரை நீட்டிக்கப்படுகிறது. மங்களூர் - திருவனந்தபுரம் இடையேயான பரசுராம் எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் வரை நீட்டிப்பு, திருச்சிராப்பள்ளி- நாகூர் வரையிலான தினசரி பயணிகள் ரயில் காரைக்கால் வரை நீட்டிப்பு, கோயம்புத்தூர்- ஈரோடு இடையேயான பயணிகள் ரயில் ஞாயிறு தவிர வாரம் 6 நாட்கள் சேலம் வரை நீட்டிப்பு, வேளாங்கன்னி - நாகூர் தினசரி பயணிகள் ரயிலானது காரைக்கால் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+