இளைஞர்கள் என்னைத் தாக்கி கற்பழிக்க முயன்றனர்-அஸ்ஸாம் எம்எல்ஏ ரூமி நாத்

அஸ்ஸாமைச் சேர்ந்தவர் டாக்டர் ரூமி நாத். இவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆவார். தனது கணவர் ராகேஷ் சிங் மற்றும் 2 வயது மகள் ஆகியோரைக் கைவிட்டு விட்டு, பேஸ்புக் மூலம் அறிமுகமான ஜாகிர் உசேன் என்பவரை மணந்து கொண்டு இஸ்லாமுக்கும் மாறி விட்டார்.
இது அஸ்ஸாமில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் தற்போது தனது 2வது கணவருன் வலம் வந்து கொண்டிருக்கும் ரூமிநாத், நேற்று கரீம் கஞ்ச் வந்து அங்கு ஒரு ஹோட்டலில் ஜாகிர் உசேனுடன் தங்கியிருந்தார். அப்போது கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் ஹோட்டலுக்குள் புகுந்தனர்.
ரூமிநாத்தின் அறைக்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்து ரூமி நாத்தையும், அவரது 2வது கணவரையும் சரமாரியாக தாக்கினர். இதில் இருவரும் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலிலிருந்து மீட்கப்பட்ட ரூமிநாத்தும், அவரது 2வது கணவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் குவஹாத்தியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார் ரூமிநாத்.
அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது திருமணம் என்பது எனது தனிப்பட்ட விவகாரம். இதில் யாரும் தலையிட உரிமையில்லை. இப்படி ஒரு தாக்குதலை தொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பலர் அத்துமீறி எனது உடலின் பல்வேறு இடங்களிலும் கையை வைத்து சில்மிஷம் செய்தனர். ஆடையை கிழித்தனர். குடிகார இளைஞர்கள் என்னைக் கற்பழிக்கவும் முயன்றனர். ஒரு பெண் என்றும் பாராமல் என்னிடம் நடந்து கொண்டனர். இது அநாகரீகமானது.
இது அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய செயல். என்னைக் கொல்ல நடந்த முயற்சி. முழுக்க முழுக்க அரசியல் சதியே இது என்றார் ரூமிநாத்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications