ஹாய், மை நேம் இஸ் கூகுள்!

ஆனால் கூகுள் என பெயர் வைப்பது இதுவரை வெளிநாடுளில்தான் பேமஸாக இருந்தது. ஆனால் முதல் முறையாக இந்தியாவிலும் இது போல பெயரிட ஆரம்பித்துள்ளனர். 2005ம் ஆண்டு உலகிலேயே முதல் முறையாக ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களது ஆண் குழந்தைக்கு ஆலிவர் கூகுள் கை என்று பெயரிட்டனர்.
தற்போது இந்த டிரெண்ட் இந்தியாவுக்கும் பரவியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த வக்கீல் முனீஷ் சந்தர் ஜோஷி. தனது புதிய ஆண் குழந்தைக்கு கூகுள் என்று பெயரிட்டுள்ளார்.
அதேபோல லூதியானாவைச் சேர்ந்த உமா தவன் என்பவரும் தனது மகனுக்கு கூகுள் என பெயரிட்டுள்ளார். இதுகுறித்து உமா கூறுகையில், எனது மகனுக்கு நான் காரணத்தோடுதான் இந்தப் பெயரை வைத்துள்ளேன். எங்கள் வீட்டில் ஏதாவது காணாமல் போனால் உடனே அதைத் தேடிக் கண்டுபிடித்துத் தருவது எனது மகன்தான். எனவேதான் தற்போது 3 வயதாகும் அவனது பெயரை கூகுள் என மாற்றியுள்ளேன் என்கிறார்.
தனது மனுக்கு கூகுள் என பெயர் வைத்தது குறித்து முனீஷ் கூறுகையில், எனது மகனுக்கு நல்ல கூர்மையான கண்கள். மேலும் தன்னைச் சுற்றி என்ன இருக்கிறது என்பதை ஆய்ந்து கொண்டே இருக்கிறான். ஒரு விதமான தேடுதல் அவனது பார்வையில் தெரியும். இதனால்தான் சர்ச் என்ஜினானன கூகுளின் பெயரை அவனுக்குச் சூட்டியுள்ளேன் என்றார்.
அதேபோல பிசினஸ்மேன் முகம்மது உமர் என்பவரும் கூட தனது மகனுக்கு கூகுள் என்றே பெயர் சூட்டியுள்ளார்.
இதுபோல பெயர் சூட்டுவது என்பது தங்களது பிள்ளைகள் மற்றவர்களிடமிருந்து தனித்துவத்துடன் திகழ வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புவதால்தான் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications