திமுக போராட்டம்: 'கேமரா பயத்தில்' நிதானமாக செயல்பட்ட போலீஸார்!

திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கொளத்தூரிலும், எம்.பி. கனிமொழி சைதாப்பேட்டையிலும் போராட்டம் நடத்தி கைதானார்கள். சென்னையில் 22 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் திமுகவினர் கைதின் போது போலீசார் அடிதடி அல்லது அடக்குமுறை முயற்சிகளை மேற்கொண்டால், அவர்களை எதிர்த்து அறவழியில் போராடுவது என சில இடங்களில் திமுக தொண்டர்கள் முடிவு செய்திருந்தனர். மேலும் போலீசார் தடியடி நடத்தினால் அதை லைவாக படம்பிடிக்க வேண்டும் என சன் டிவி, கலைஞர் டிவி கேமராமேன்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாம்.
இந்த நிலையில், நேற்று தமிழக டிஜிபி ராமானுஜம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் போலீசாரால் கலவரம் ஏற்பட்டது என்றும், போலீசாரால் தான் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும் யாரும் கூறும் அளவுக்கு நடக்கக் கூடாது. திமுக போராட்டத்தை பல டிவி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குறிப்பாக திமுக சார்பு டிவிக்கள் செய்தியை மிகைப்படுத்திவிடும். எனவே காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் கோபம் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. திமுகவினரை கைது மட்டுமே செய்ய வேண்டும். சம்பவ இடத்தில் பிரச்சனை எழும்பட்சத்தில் உடனே காவல் துறை தலைமையை தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெறலாம் என கூறப்பட்டிருந்ததாம்.
இதனால் இன்றைய போராட்டத்தின்போது போலீஸார் படு கவனமாக செயல்பட்டனர். தொணட்ர்களை கூட பஸ்சில் ஏற்றும்போது போர்ஸ் செய்யாமல் மெதுவாக ஏற்றினர்.
-
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications