40க்கு 40 நமக்கே.. இன்று முதலே ஆரம்பியுங்கள்: ஓ.பன்னீர் செல்வம் உத்தரவு!
சென்னை: வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுகவே கைப்பற்ற வேண்டும். அதற்கான பணிகளை இன்றே தொடங்குங்கள் என்று அதிமுகவினருக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் நடிகர் ராமராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில்,
தமிழகத்தில் அதிமுக 22 ஆண்டு காலம் ஆட்சி நடத்தி உள்ளது. இப்போது 23-வது வருடம் நடந்து வருகிறது. எந்த ஒரு கட்சியும் தமிழகத்தில் இவ்வளவு காலம் நாட்டை ஆண்ட சரித்திரம் இல்லை. அதனால்தான் அதிமுகவில் இளைஞர்கள் உறுப்பினராகி வருகிறார்கள்.
நூறாண்டில் வேண்டிய சாதனைகளை ஓராண்டில் செய்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாட்டு மக்கள் புதுக்கோட்டை தேர்தலில் வெற்றிவாகை சூட்டினார்கள். நில அபகரிப்பு வழக்கில் திமுகவினரை கைது செய்வதில் என்ன தப்பு இருக்கிறது. திமுகவை அதிமுக அரசு பழிவாங்குகிறது என்று கருணாநிதி கூறுகிறார்.
முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களின் பிரச்சினையை தீர்த்து வைத்தால் பழிவாங்குகிறார்கள் என்று அர்த்தமா? நாட்டு மக்களுக்கு விலையில்லா ஆடு, மாடுகள், அரிசி மற்றும் முதியோர் உதவி தொகை அதிகரிப்பு, ஊனமுற்றோருக்கு உதவிகள் என பல்வேறு நல்ல திட்டங்களை செய்து வருகிறார்.
தமிழகத்தை பார்த்து பிற மாநில முதல்வர்களும் திட்டங்களை பின்பற்றி வருகிறார்கள். முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் இந்தியாவின் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 நாம் வெற்றி பெற இன்று முதல் உழைக்க வேண்டும் என்றார் அவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications