''மன்மோகன் சிங் பிரதமர் போல செயல்படவில்லை.. ஆலோசகர் போல செயல்படுகிறார்''..!
டெல்லி: மன்மோகன் சிங் தலைவர் (பிரதமர்) போல செயல்படவில்லை, நிதித்துறை ஆலோசகர் போல செயல்படுகிறார் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த சின்ஹா நிருபர்களிடம் கூறுகையில், நாட்டில் இப்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் முழுக்க முழுக்கக் காரணம்.
தற்போது பொருளாதாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ள உறுதிமொழிகள் நகைப்புக்குரியவையாக உள்ளன.
மன்மோகன் சிங் எப்போதும் அரசின் ஆலோசகராகவே செயல்பட்டு வந்துள்ளார். 8 ஆண்டுகள் பிரதமராகவும், சில ஆண்டுகள் நிதி அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள உருவாக்கியது யார்?. இந்தியாவின் நிலவும் பொருளாதார சூழலுக்கு சர்வதேச நெருக்கடிகளை காரணம் காட்டுவது தவறு என்றார் சின்ஹா.
திமுக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்-பாஜக:
இலங்கை வீரர்களுக்கு இனி இந்தியாவின் எந்தப் பகுதியிலும் போர் பயிற்சி அளிக்க மாட்டோம் என்று மத்திய அரசு உத்தரவாதம் அளிக்காவிட்டால் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக உடனே விலக வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை விமானப்படை வீரர்களுக்கு இந்தியாவில், அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பது கண்டனத்துக்குரியது. இலங்கை தமிழர்களை அழிக்க தமிழ் மண்ணிலேயே பயிற்சி அளிக்கப்படுவது ஏற்க முடியாதது.
தமிழனை படுகொலை செய்யும் பாவச் செயலுக்கு பதவி சுகத்துக்காக திமுக துணைபோகக்கூடாது. இனி சிங்கள வீரர்களுக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் போர் பயிற்சி அளிக்கமாட்டோம் என்று மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அவ்வாறு உறுதி அளிக்காவிட்டால் திமுக அமைச்சர்கள் உடனே பதவி விலக வேண்டும் என்றார்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications