ஓசூரில் பெரியார் தி.க. பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு, தலையை வெட்டி கொலை- சிபிஐ எம்எல்ஏ மீது வழக்கு
ஓசூர்: ஓசூர் அருகே பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் துப்பாக்கியால் சுட்டும், தலையை துண்டித்தும் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் உத்தனப்பள்ளி அருகே உள்ளது அயர்னப்பள்ளி ஊராட்சி. இங்குள்ள பாலேகுளத்தை சேர்ந்த பழனி என்ற பழனிச்சாமி, கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.
வழக்கம் போல காலையில் தமது மகனுடன் தோட்ட வேலைக்குச் சென்ற பழனியை 20 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தது. முதலில் துப்பாக்கியால் சுட்டது. இதில் படுகாயங்களுடன் தப்பி ஓடிய பழனிச்சாமி சிறிது தொலைவில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அப்போது அந்த கும்பல் வீச்சரிவாளால் பழனிசாமியை சரமாரியாக வெட்டியதுடன் தலையை தனியாக துண்டித்து வயலில் வீசினர். இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
கொலையுண்ட பழனிசாமி தளி ஒன்றிய தி.மு.க. தலைவர் வெங்கடேசன் படுகொலை வழக்கு உள்பட மேலும் பல வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். ஆரம்பத்தில் நக்சலைட் இயக்கத்தில் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கோயில் வழிபாடு தொடர்பாக பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும் அப்பகுதி கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வந்த நிலையில் இக்கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.
இக்கொலை தொடர்பாக தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், அவரது சகோதரர் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications