குடியரசுத் தலைவர் தேர்தல்: நாளை சென்னை வருகிறார் பி.ஏ.சங்மா

Subscribe to Oneindia Tamil

PA Sangma
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளரான சங்மா நாளை சென்னை வருகை தர உள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். சங்மாவுக்கு அதிமுக, பிஜூ ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

வரும் 19-ந் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிதான் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டாலும் மனம் தளராத பி.ஏ.சங்மா ஒவ்வொரு மாநிலமாக சென்று தமக்கு ஆதரவு திரட்டி வருகிறார். நாளை தமிழகதுக்கு சங்மா வருகை தருகிறார்.

சென்னைக்கு வருகை தரும் சங்மா, அதிமுக தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். பிரணாப் முகர்ஜிக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் எப்படி பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனவோ அதேபோல் சங்மாவுக்கு அதிமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்படலாம் என தெரிகிறது.

மேலும் தற்போது கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவை வரும் 15-ந் தேதி சங்மா சந்திக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+