For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரணாப்புக்கு ஓட்டும் போடும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை அள்ளி வழங்க மத்திய அரசு முடிவு

By Mathi
Google Oneindia Tamil News

Pranab Mukherjee
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை அள்ளி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி முகாமில் இருந்தாலும் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்த ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகார் மாநிலத்துக்கு ஏற்கெனவே சிறப்பு நிதி வழங்கப்பட்டது.

தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு சிறப்பு நிதி வழாங்க உள்ளது. ஏற்கெனவே 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவை என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி வருகிறார். பிரணாப் முகர்ஜியை முதலில் ஆதரிக்க மறுத்து பின்னர் ஆதரிக்கிறது சமாஜ்வாதி கட்சி. இதனால் கணிசமான சிறப்பு நிதி ஒதுக்கப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக விவாதிக்க ஜூலை 11-ந் தேதியன்று உத்தரப்பிரதேச தலைமைச் செயலரை டெல்லிக்கு பிரதமர் அலுவலகம் அழைத்திருக்கிறது.

எப்படியெல்லாம் ஓட்டு வாங்குறாங்கப்பா..

English summary
The Prime Minister's Office is considering a special package for Uttar Pradesh which has sought Rs.90,000 crore to perk up developmental work in the state and a meeting in this regard is expected to take place on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X