அமைச்சர் கார் மறிப்பு: பாமக அலுவலகத்தை சூறையாடிய அதிமுகவினர்- திண்டிவனத்தில் பதட்டம்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே அதிமுக மற்றும் பாமகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
திண்டிவனம் அருகே உள்ளது காவேரிப்பாக்கம். அங்கு நேற்றிரவு நகராட்சி பள்ளி வளாகத்தில் அமர்ந்து அதிமுகவினர் சிலர் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதனை பாமகவைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் ஜெயராஜ் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து இரு தரப்பும் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தன. இந்த நிலையில் ஜெயராஜை மட்டும் போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அப்போது ஜெயராஜ் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் சாலைமறியலில ஈடுபட்டனர்.
இதற்கிடையே திண்டிவனத்தில் இருந்து சென்னை புறப்பட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் காரை பாமகவினர் வழிமறித்ததாகத் தகவல் பரவியது. இதையடுத்து அங்கிருந்த பாமக அலுவலகத்தை அதிமுகவினர் சூறையாடினர். உடனே அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் திண்டிவனத்தில் பதற்றம் நிலவி வருகின்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications