இன்று முதல் தட்கல் புக்கிங் நேரம் மாற்றம் - இனி காலை 10 மணிக்கே புக்கிங் தொடக்கம்!

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவில் ஏராளமான குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் குவிந்தன. இதையடுத்து பல்வேறு அதிரடி சோதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இருப்பினும் முறைகேடுகளைத் தடுக்க முடியவில்லை. பொதுமக்களைக் கூட கட்டுப்படுத்த முடிகிறது. ஆனால் இந்த டிராவல் ஏஜென்டுகளின் அட்டகாசம்தான் தாங்க முடியவில்லை.
முன்பு பயண தேதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே தட்கல் முன்பதிவு டிக்கெட் கொடுக்கப்பட்டது. பின்னர், ஒரு நாளைக்கு முன்பு என மாற்றப்பட்டது. தற்போது முன்பதிவுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
ரயில் முன்பதிவு மையங்களில், இதுவரை தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. செவ்வாய்க்கிழமை முதல் காலை 10 மணிக்குத்தான் தட்கல் முன்பதிவு தொடங்கும். ஐஆர்சிடிசி ரயில் டிராவல் சர்வீஸ் ஏஜெண்டுகள் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து டிராவல் ஏஜெண்டுகளும் 12 மணி வரை தட்கல் டிக்கெட் எடுக்க முடியாது.
ரயில் புறப்படுவதற்கு 120 நாட்களுக்கு முன்பு (4 மாதங்களுக்கு) ரயில் முன்பதிவு டிக்கெட் எடுக்கலாம். இதனை ஓபனிங் டே என்று சொல்வார்கள். இந்த நாளில் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை ஏஜெண்டுகள் முன்பதிவு டிக்கெட் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தடை இப்போதும் நீடிக்கிறது.
ரயில் முன்பதிவு மையங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கவுண்ட்டர்கள் இருந்தால், அங்கு தட்கல் முன்பதிவுக்காக தனியாக கவுண்ட்டர்கள் காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை செயல்படும். தட்கல் முன்பதிவுக்காக தனி வரிசையும் உருவாக்கப்படும். ரயில் முன்பதிவு மையத்தில் ஒரேயொரு கவுண்ட்டர் இருந்தால் தட்கல் விண்ணப்பங்கள் காலை 11 மணி வரை முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்படும். அந்த நேரத்தில் தனி வரிசையும் உருவாக்கப்படும்.
ஒருங்கிணைந்த ரயில் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்கப்படும் மையங்களைப் பொருத்தவரை, காலை 10 மணிக்கு தட்கல் முன்பதிவு தொடங்கும். குறிப்பிட்ட ரெயில் நிலையத்திற்கு காலை 10 மணி முதல் காலை 10.30 மணி வரை அரை மணி நேரத்திற்குள் வந்து செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் கொடுத்து முடிக்கப்பட்ட பிறகு, தட்கல் டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையில்
சென்னையைப் பொறுத்தவரை சென்டிரல் ரயில் நிலையத்தில் உள்ள முதல் தளத்தில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையத்தில், 11 கவுண்டர்கள் தட்கல் டிக்கெட் கொடுப்பதற்காகவே திறக்கப்படுகின்றன.
அதேபோல எழும்பூர் சந்திப்பில் 5, கடற்கரை ரயில் நிலையத்தில் ஒரு கவுண்டர் திறக்கப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications