பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த்தின் வறுமை ஒழிப்புத் திட்டம்!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் எனது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடெங்கும் பல வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை நம்முடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு எனது பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் மாதம் முழுவதும் 'மக்களுக்காக மக்கள் பணி' என்ற திட்டத்தை நிறைவேற்றும் வகையில் வறுமை ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் முதல் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களிலும் 32 நாட்கள் பிறந்த நாள் விழாவாக கொண்டாடப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த நாட்கள் கட்சியினர் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவார்கள்.
தமிழ்நாடு அரசு தேர்வாணைய கழகத்தின் சார்பில் சுமார் 10,000 இடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்- 4 தேர்வில் 12 லட்சம் பேர் கலந்து கொள்ள வேண்டிய அவல நிலை இருக்கிறது என்பதை பார்க்கிறபோது நம் முன்னே எத்தகைய மகத்தான பணி காத்துக் கிடக்கிறது என்பதை எளிதில் உணரலாம்.
ஊழலையும், வறுமையையும் ஒழிப்பதே நமது முதல் வேலை. இந்த ஒரு மாதத்தில் மக்களிடையே அத்தகைய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த நாம் உணர்ச்சியோடும், ஊக்கத்தோடும் பாடுபடுவோம் என்ற உறுதியை ஏற்போம் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications