குற்றாலம் படகு குழாமில் படகு இயக்கம் தொடங்கியது: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலத்தில் சீசன் துவங்கினாலும் தொடர்ந்து சாரல் மழை ஏமாற்றி வருகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைந்து காணப்படுகிறது. குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக ஐந்தருவி வெண்ணமடை குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் படகு சவாரி நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு சீசன் காலதாமதமாக துவங்கியதாலும், படகு குழாமிற்கு போதிய தண்ணீர் வராததாலும் படகு சவாரி துவக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த சாரல் மழை காரணமாக ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் படகு குழாமிற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. படகு குழாமில் ஓரளவு தண்ணீர் வந்துள்ளதால் படகு சவாரி துவக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து இன்று காலை படகு போக்குவரத்து துவங்கப்பட்டது.
பேரூராட்சி தலைவர் லதா படகு சவாரியைத் தொடங்கி வைத்தார். தனிப் படகு கட்டணமாக 50 ரூபாயும், 2 இருக்கை படகிற்கு 75 ரூபாயும், 4 இருக்கை படகிற்கு 100 ரூபாயும், துடுப்பு படகிற்கு 120 ரூபாயும் வசூலிக்கப்படும். இக்கட்டணம் அரை மணி நேரத்திற்கு மட்டுமே. படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு உயிர் காக்கும் உடை (லைப் ஜாக்கெட்) வழங்கப்படும். இதற்கு தனி கட்டணம் கிடையாது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications