பாபநாசத்தில் சுற்றுலா பயணிகளிடம் மதுபாட்டில்கள் பறிமுதல்: ரூ.10,000 அபராதம்
நெல்லை: வனத்துறை கண்காணிப்பையும் மீறி சுற்றுலாப் பயணிகள் பாபநாசம் மலைப்பகுதிக்கு கொண்டு சென்ற நூறறுக்கணக்கான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். தற்போது குற்றால சீசனும் தொடங்கிவிட்டதால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அகஸ்தியர் அருவிக்கும் வருகின்றனர். இதனால் கூட்டம் அங்கும் அலை மோதுகிறது. அகஸ்தியர் அருவிக்கு மதுபாட்டில்கள் கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
வனப்பகுதியில் மது அருந்துவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் மதுபாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் சிலர் பிரியாணி, சாதம் போன்ற உணவுகளில் மறைத்து வைத்தும், பெட்ரோல், டீசல் என்று கூறி தண்ணீர் பாட்டில்களிலும் மதுபானங்களை எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு நூதனமாக கடத்தும் மதுபாட்டில்களையும் வனத்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்து உடைத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முண்டந்துறை புலிகள் காப்பாக இணை இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவுப்படி பாபநாசம் வனச்சரகர் சுப்புராவ் மற்றும் வன ஊழியர்கள் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை சோதனை செய்தனர்.
அந்த சோதனையின்போது ஏராளமான மதுபாட்டில்கள் சிக்கின. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து உடைத்தனர். மேலும் மதுபாட்டில்களை கொண்டு வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். நேற்று ஒருநாள் மட்டும் சுமார் ரூ.10,000க்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications