ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் சாட்சியத்துக்கு வாஜ்பாயை அழைக்கப்போவதில்லை: பி.சி. சாக்கோ
சென்னை : ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து சாட்சியம் அளிக்க முன்னாள் பிரதமர் வாஜ்பாயை அழைக்கப் போவதில்லை என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ தெரிவித்தார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக தொடர்பாக பி.சி.சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரித்து வருகிறது. இந்தக் குழு, வரும் டிசம்பர் மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், விசாரிக்க வேண்டிய சாட்சிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
இக்குழு தயாரித்த பட்டியலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தொலை தொடர்புத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ஜக்மோகன் விலகிய பிறகு அவரது துறையை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கவனித்தார். அந்த ஆட்சியில் இத்துறை தொடர்பான அமைச்சர்கள் குழுவின் தலைவராக பெர்னாண்டஸ் இருந்தார். எனவே இந்த இருவரையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ஜே.பி.சி. உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து பி.சி.சாக்கோ கூறுகையில், "வாஜ்பாய், பெர்னாண்டஸ் ஆகியோரின் பெயர்களும் விசாரிக்க வேண்டிய சாட்சிகள் பட்டியலில் இடம்பெற்றதற்காக நான் வருந்துகிறேன். அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆலோசனைதான் கூறப்பட்டது. எனினும், உடல்நலக் குறைவு காரணமாக அவர்களை நிச்சயம் அழைக்க மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications