மத்திய அரசின் நெருக்கடிக்கு பணிந்தது திமுக- தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: "தமிழீழம்" என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று மத்திய அரசு எச்சரித்துவிட்ட நிலையில் தமிழீழம் கோரி திமுக நடத்த உள்ள டெசோ மாநாட்டில் "தமிழீழம்" கோரி தீர்மானம் போடமாட்டோம் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

1985-ல் டெசோ என்ற தமிழீழ அதரவு இயக்கம் உருவாக்கப்பட்டது. அது பின்னர் செயலிழந்துவிட்டது. தற்போது ஈழத்தில் யுத்தம் முடிந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு "தமிழீழம் நிறைவேற வேண்டும் என்பதுதான் தன் வாழ்நாள் ஆசை" என்று கூறி அண்மையில் டெசோ மாநாட்டை கருணாநிதி புதுப்பித்தார். இந்த அமைப்பின் சார்பில் விழுப்புரத்தில் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 12-ந் தேதி சென்னையில் மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் "தமிழீழம்" என்பது எங்கு அமைந்தாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை மேலும் நீட்டித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திடீரென கருணாநிதியை நேற்று சென்னையில் சந்தித்து பேசினார். இதனால் டெசோ மாநாட்டை திமுக நடத்துமா? அல்லது தமிழீழ கோரிக்கையை மென்மையான குரலில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த சந்தேகங்களுக்கு இன்று திமுக தலைவர் கருணாநிதி பதிலளித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழீழத்துக்கு ஆதரவாக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கமான டெசோ அமைப்பு நடத்தும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படமாட்டாது என்று அதிரடியாக கூறியிருக்கிறார்.

கருணாநிதிக்கு கண்டனம்

கருணாநிதியின் இந்த அறிவிப்புக்கு ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், அமைப்பின் பெயரே தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம்..அப்படிப்பட்ட ஒரு இயக்கம் நடத்தும் மாநாட்டில் தமிழீழத்துக்கு ஆதரவாக தீர்மானம் போடமாட்டோம் என்பது கோபுரம் இல்லாத கோவிலைப் போன்றது என்று கூறியுள்ளார்.

இலக்கு- இன்றைய தேவை

திமுகவின் இந்த பல்டியை நியாயப்படுத்தியுள்ள டி.கே.எஸ். இளங்கோவன், எங்களது இன்றைய தேவை டெசோ மாநாடுதான். இலக்கு தமிழீழம் என்பதில் எந்த மாற்றம் இல்லை என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+