''என் புருஷன் யோகா டீச்சரோடு ஓடிப் போயிட்டாரு, வீட்டை விக்கப் போறோம்...!''

Subscribe to Oneindia Tamil

Elle Zober
22 வயதேயான யோகா டீச்சரோடு ஓடிப் போனார் ஒரு கணவர். இதனால் வெகுண்ட மனைவி படு சாதுரியமாக, தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்த வீட்டை விற்க நூதனமான முறையி்ல விளம்பரம் கொடுத்து அனைவரையும் கவர்ந்து விட்டார்.

அமெரிக்காவில்தான் இந்தக் கூத்து. அந்த பெண்ணின் பெயர் எல்லி ஸோபர். 37 வயதாகிறது. இவருடைய கணவருக்கும், 22 வயதான கல்லூரி மாணவி + யோகா டீச்சருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு விட்டது. மேலும், தனது வீட்டுக்கு வராமல் அந்தப் பெண்ணோடு சுற்றிக் கொண்டிருந்தார் ஸோபரின் கணவர். இதனால் வெகுண்ட ஸோபர், தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார்.

இதையடுத்து தற்போது தானும்,தனது கணவரும் சேர்ந்து வசித்த வீட்டை விற்க தீர்மானித்த ஸோபர் அதற்காக ஒரு சூப்பர் ஐடியாவை களம் இறக்கினார். தனது வீட்டுக்கு வெளியே வீடு விற்பனைக்கு என போர்டு வைத்தார்.

அந்தப் போர்டில் இப்படி இருந்தன வாசகங்கள்...

22 வயதுப் பெண்ணுக்காக எங்களை விட்டு விட்டார் எனது கணவர். இந்த வீடு விற்பனைக்கு உள்ளது. தனியாக நிற்கும், சற்றே மனக் கசப்புடன் இருக்கும், பெண்ணாகிய நான், எனது கணவரின் கள்ளக்காதலால் இந்த வீட்டை விற்கும் நிலைக்கு வந்து விட்டேன். வாங்க விரும்புவோர் அணுகலாம், செக்ஸ் ரீதியான அணுகுமுறைகளைக் கண்டிப்பாக தவிர்க்கவும் என்று போட்டு வைத்துள்ளார் குசும்புக்கார ஸோபர்.

ஏன் இப்படி ஒரு விளம்பரம் என்று அவரிடம் கேட்டால், இது உண்மையில் எனது தாயாரின் ஐடியாதான். அவர் ஆரம்பத்தில் சொன்ன ஐடியா இதை விட படு மோசமாக இருந்தது. நான்தான் அதை சற்று மாற்றி கொஞ்சம் நாகரீகமாக போட்டு வைத்தேன் என்றார். இவரது இரு மகள்களும் கூட தாயாரின் இந்த போர்டுக்கு சப்போர்ட்டாக இருந்துள்ளனராம்.

இந்த விளம்பர போர்டைப் பார்த்து விட்டு ஏகப்பட்ட பேர் பதில் அனுப்பியுள்ளனராம். அவர்களில் பலரும் ஸோபரின் கணவரை சரமாரியாக திட்டியுள்ளனர். பேசாமல் அவரைக் கொன்று வீட்டுத் தோட்டத்தில் புதைத்திருக்கலாமே ஸோபர் என்றும் ஒரு கமெண்ட் வந்ததாம். அதேசமயம், உங்க வீட்டு அழுக்கையெல்லாம் ஏன் வெளியில் கொண்டு வந்து கொட்டுகிறீர்கள் என்று சிலர் விமர்சிக்கவும் செய்துள்ளனராம்.

எப்படியோ, 3 பெட்ரூம் கொண்ட இந்த வீட்டுக்கு கண்டிப்பாக நல்ல விலை கிடைக்கும் என்று ஸோபரும் அவரது குடும்பத்தினரும் நம்பிக்கையில் உள்ளனர்.

நம்ம ஊரிலும் இப்படிச் செய்து பார்க்கலாமே...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+