புளியங்குடி மலைப்பகுதியில் மர்மகும்பல் நடமாட்டம்: வனத்துறையினர் விடிய, விடிய சோதனை
நெல்லை: புளியங்குடி மேற்குத் தொடர்ச்சி மலையில் மர்ம கும்பல் நடமாட்டத்தை முன்னிட்டு வனத்துறையினர் காட்டுப் பகுதிக்குள் விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் சிவகரி, புளியங்குடி, கடையநல்லூர், குற்றாலம், திருநெல்வேலி ஆகிய வனச்சரகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளன. கடந்த சில ஆண்டு்களாக புளியங்குடி, சிவகரி, கடையநல்லூர் வனச்சரகங்களில் மான், மிளா, காட்டுபன்றி ஆகிய விலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்து வருகிறது. சிவகிரி பகுதியில் மான் ஒன்றை கொன்று கொம்பை மட்டும் ஒரு கும்பல் எடுத்து சென்றதும், புளியங்குடி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பியால் குத்தி கர்ப்பமாக இருந்த புள்ளிமானை கொடூரமாக கொலை செய்த விவகாரத்திலும் 2 பேர் மட்டுமே பிடிபட்டனர். வேட்டையில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகள் உள்பட பலர் தப்பிவிட்டனர்.
இதே போன்று கடையநல்லூர் வனப்பகுதியில் அரிய வகை இனமான சருகு மானை ஜீப்பில் வந்து சுட்டு வேட்டையாடிய முக்கிய புள்ளிகள் தப்பிவிட்டனர். சிவகிரி மற்றும் கடையநல்லூர் வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடுவது சர்வசாதாரணமாகிவிட்டது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கடையநல்லூரிலிருந்து சிவகரி வரை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நள்ளிரவில் மர்ம கும்பல் நடமாடுவது அதிகரித்துள்ளது. நேற்று புளியங்குடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மர்ம கும்பல் நடமாடுவதாக மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அம்புரோஸ் உத்தரவுப்படி கடையநல்லூர் வனச்சரகர் வெள்ளத்துரை தலைமையில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் புளியங்குடி, கோட்டைமலை, செல்லுபுளி போன்ற வனப்பகுதிகளில் விடிய விடிய சோதனை நடத்தினர். இது குறித்து முன்கூட்டியே தகவல் அறிந்ததாலோ என்னவோ மர்ம கும்பல் இருந்தற்கான தடயங்கள் இல்லை. இருந்த போதிலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications