ஏமாற்றும் மழை: பாபநாசம் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதற்கிடையே ஆடி அமாவாசையை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் வறண்டு காணப்படுகின்றன. நெல்லை மாவட்டத்தில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய கார் சாகுபடி தண்ணீர் இல்லாததால் ஏமாற்றம் அளித்துள்ளது. விவசாய தேவைக்கு தண்ணீர் இல்லாத நிலையில் அணையில் உள்ள தண்ணீரை வைத்து குடிநீர் பற்றாக்குறையை பொதுபணி்த்துறை சமாளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு ஓரளவு தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து தொடங்கியது.
தற்போது அணை பகுதியில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. பாபநாசம் அணையில் 41.80 அடியாக இருந்த நீர்மட்டம் 41.45 அடியாகக் குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 365 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழை கண்ணாமூச்சி ஆடுவதால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications