அபுஜிண்டாலிடம் விசாரணை நடத்துகிறது மும்பை தீவிரவாத தடுப்பு போலீஸ்
Subscribe to Oneindia Tamil

சவூதி அரேபியாவால் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட தீவிரவாதி அபுஜிண்டாலிடம் ஜூம்மா மசூதி தாக்குதல் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணை முடிவடைந்த நிலையில் டெல்லி நீதிமன்றட்தில் அபுஜிண்டால் ஆஜர்படுத்தப்பட்டான். அவனிடம் விசாரணை நடத அனுமதிக்கக் கோரி ஏற்கெனவே மும்பை போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதை ஏற்ற நீதிபதி அபுஜிண்டாலை மும்பை போலீசாரிடம் ஒப்படைக்க அனுமதி அளித்தார். இதையடுத்து அவன் மும்பைக்கு கொண்டுவரப்பட்டான். இன்று பிற்பகல் மும்பை நீதிமன்றத்தில் அவன் ஆஜர்படுத்தப்பட உள்ளான்.
2006-ம் ஆண்டு அவுரங்காபாத்தில் ஆயுதக் குவியல் கண்டெடுக்கப்பட்ட விவகாரம், மும்பை தாக்குதல். 2010 ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் நாசிக் போலீஸ் அகாடெமி மீதான தாக்குதல் ஆகியவை குறித்து அபுஜிண்டாலிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications