வயிற்று கோளாறு: அப்பல்லோ மருத்துவமனையில் கருணாநிதிக்கு சிகிச்சை
சென்னை: இன்று அதிகாலையில் வயிற்றுக் கோளாறால் அவதிப்பட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாயலத்திற்கு சென்று கட்சி பணிகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு உணவு உட்கொண்டு படுக்கைக்கு சென்றார்.
இன்று அதிகாலையில் 1.30 மணி அளவில் கருணாநிதிக்கு திடீரென வயிற்று கோளாறு ஏற்பட்டது. இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அதிகாலையில் 2.30 மணி அளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு கருணாநிதிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதனையடுத்து காலை 6.30 மணி அளவில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதி அளித்தனர். இதையடுத்து 6.45 மணி அளவில், மருத்துவமனையில் இருந்து கருணாநிதி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். தற்போது அவர் முழுமையாக குணமடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து











Click it and Unblock the Notifications