முலாயமைப் போல செல்லாத ஓட்டுப் போட்ட எம்.பிக்கள் 15 பேர்
Subscribe to Oneindia Tamil

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த எம்.பிக்களில் 15 பேர் செல்லாத ஓட்டுகளைப் போட்டுள்ளனர்.
பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்தோரில் 9 எம்.பிக்கள் செல்லாத ஓட்டுகளையும் சங்மாவுக்கு வாக்களித்த எம்.பிக்களில் 6 பேர் செல்லாத ஓட்டுகளையும் போட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்து செல்லாத ஓட்டு போட்டவர் ஒருவர் முலாயம்சிங். அவர் சங்மாவுக்கு முதலில் வாக்களித்துவிட்டு பின்னர் அதை கிழித்துப் போட்டு பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்தார். அதனால் அவரது வாக்கு செல்லாது என்று ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications