மனைவியுடன் சென்று பிரணாபை வாழ்த்தினார் மன்மோகன் சிங்
Subscribe to Oneindia Tamil

நாட்டிந் 13வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பிரணாப் முகர்ஜி. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சங்மாவை பெரிய வாக்கு வித்தியாசத்தில் அவர் வீழ்த்தியுள்ளார்.
இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தனது மனைவி குருசரன் கெளருடன் பிரணாப் முகர்ஜி வீட்டுக்கு விரைந்து மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் நேரில் வாழ்த்தினர்.
திமுக தலைவர் கருணாநிதியும் தொலைபேசி மூலம் பிரணாப் முகர்ஜியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது கருணாநிதிக்கும் பிரணாப் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications