கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று போலீஸார் டிஸ்மிஸ்: மதுரை எஸ்.பி. அதிரடி
மதுரை: லஞ்சம் வாங்குதல், மாமுல் வாங்குதல் போன்ற பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூன்று போலீசார் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் ராஜேந்திரன். அதே போல உசிலம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக இருந்தவர் செல்வம். அவர்கள் இருவரும் கடந்த 2010ம் ஆண்டு வாகனங்களை நிறுத்தி மாமூல் வசூலித்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இந்தப் புகார்கள் குறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், உசிலம்பட்டி நகரக் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணி புரிந்து வந்தவர் பொன்னுசாமி. அவர் கடந்த 2006ம் ஆண்டு விராலிமலையில் கஞ்சா கடத்திய வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தவிர உசிலம்பட்டியில் ஒரு கொலை வழக்கிலும் அவருக்குத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீதும் துறைரீதியான விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில், அவர்கள் மூன்று பேரையும் டிஸ்மிஸ் செய்து மதுரை போலீஸ் சூப்பிரண்ட் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
மதுரையில் லஞ்சம் வாங்கும், மாமுல் வசூலில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications