குரூப் 2 நேர்காணலில் கலந்து கொள்ளத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
சென்னை: குரூப் 2 நேர்காணலில் கலந்து கொள்ளத் தவறியவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
குரூப் 2 பணிகளுக்கான நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த ஜூன் 8ம் தேதி வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்வு நடைபெறும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய நேர்காணல் தேர்விற்கான அழைப்பு கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தேர்வாணையம் குறிப்பிட்ட நாளில், நேரத்தில் நேர்முகத் தேர்வுக்கு தவிர்க்க முடியாத மற்றும் எதிர்பாராத காரணங்களால் வரமுடியாதவர்கள், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு தேர்வாணையத்தில் வரும் 26ம் தேதி பிற்பகல் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிலும் வரும் 27ம் தேதி முற்பகல் நடைபெறும் நேர்காணல் தேர்விலும் கலந்து கொள்ளலாம். அவர்கள், தங்களுக்கு ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய நேர்காணல் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து எடுத்து வர வேண்டும். மேற்குறிப்பிட்ட நாளில் நேர்காணல் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் வருகை தரத் தவறும் பட்சத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அதன்பின் நேர்காணல் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications