டயட்டில் இருக்கும் புதுச்சேரி லட்சுமி: தினமும் 2 கிமீ வாக்கிங் வேறு...
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் உடை எடையைக் குறைக்க அதை வனத்துறையினர் டயட்டில் வைத்துள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி. லட்சுமியை சித்ரவதை செய்வதாகவும், அதை வைத்து பணம் சம்பாதிப்பதாகவும் மிருக வதை தடுப்பு அமைப்பு புகார் தெரிவித்தது. இகையடுத்து லட்சுமியை மீட்டு அதற்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு புதுச்சேரி வனத்துறையினருக்கு மத்திய வன அமைச்சக டைரக்டர் ஜெனரல் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் கடந்த 1ம் தேதி லட்சுமி வனத்துறையின் பாதுகாப்பின்கீழ் வந்தது. அதன் உடல் எடை 3,600 கிலோவாக இருப்பதால் அதன் எடையைக் குறைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் வனத்துறை மருத்துவரின் உதவியை நாடியுள்ளனர்.
இது குறித்து வனத்துறை மருத்துவர் குமரன் கூறுகையில்,
யானை லட்சுமியின் உடல் எடையைக் குறைக்க அதற்கு தினமும் ராகி களி, சத்து மாவு, புல் வழங்கப்படுகிறது. அதன் உள் உறுப்புகளை சுத்தம் செய்ய கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதற்கு அஸ்தசூரணம் கொடுக்கப்பட்டது. டயட் போக அதை தினமும் காலை, மாலை வேளையில் 2 கிமீ தூரம் வாக்கிங் அழைத்துச் செல்கின்றனர். வாக்கிங் செல்லும்போது இடையிடையே துதிக்கையால் கட்டையைத் தூக்கிக் கொண்டு நடக்க அதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications