அப்சல் குரு குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை-பிரணாப் முகர்ஜி

இதுகுறித்து ஒரு டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின்போது கூறுகையில், அப்சல் குரு குறித்து என்னிடம் கேட்டால் என்னிடம் இப்போது எந்தப் பதிலும் இல்லை. நான் இன்னும் குடியரசுத் தலைவராக பதவியேற்கவில்லை. எனவே அதற்கு முன்பு இதுகுறித்து கருத்துக் கூறுவது தவறு. மேலும் அந்த விவகாரம் குறித்து நான் ஆராய்ந்து பார்த்த பிறகே ஒரு கருத்துக்கு வர முடியும் என்றார் பிரணாப்.
அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்கும் முடிவையே பிரணாப் முகர்ஜி முதலில் எடுக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே வலியுறுத்தி நேற்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வெற்றி குறித்து பிரணாப் கூறுகையில், எனக்கு காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்லாமல், பிற கட்சிகளும் கூட பெரிய அளவில் ஆதரவு தெரிவித்திருந்தன. இது என்னை நெகிழ வைத்து விட்டது. சொன்னதோடு நில்லாமல் அவர்கள் எனக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இது வழக்கமாக நடைபெற முடியாத ஒன்று. ஆனால் அவர்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளனர். எனது பொது வாழ்க்கைக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசாக இதை உணர்கிறேன் என்றார் பிரணாப் முகர்ஜி.
இந்தத் தேர்தலில் உங்களை வருத்தமடைய வைத்த விஷயம் என்ன என்று கேட்டபோது, அரசியல் கட்சிகளிடையே நிலவிய துவேஷம், வெறுப்புணர்வுதான் என்னை வருத்தமடைய வைத்தது. நான் எந்தக் கட்சிக்கும் சார்பான குடியரசுத் தலைவராக இருக்க மாட்டேன். அனைவருக்கான குடியரசுத் தலைவராகவும் நான் இருப்பேன் என்றார்.
குடியரசுத் தலைவரானது குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டபோது, மிராட்டியிலிருந்து (பிரணாபின் சொந்த் ஊர்), ரெய்சினாவுக்கு (குடியரசுத் தலைவர் மாளிகை) வந்திருப்பது மிகப் பெரிய பயணத்தின் முடிவுதான். நான் சிறுவயதில் சேட்டைக்காரனாக இருந்தேன். ஏதாவது சேட்டை செய்து சிக்கலில் மாட்டிக் கொள்வேன் என்றார் சிரித்தபடி.
25ம் தேதி முற்பகல் 11 மணியளவில் நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications